தத்துவம்




அந்த துறவியாருக்கு இரு மாணவர்கள் இருந்தனர் . தினமும் அவர் அவர்களுக்கு பாடம் பயிற்றுவித்தார். இன்று அவர்களை கடற்கரைக்கு அழைத்து வந்தார். சிறிது நேரம் , மூவரும் நின்றிருந்தனர். பிறகு துறவி முதல் மாணவனை நோக்கி " இன்று நீ பயின்றதை விளக்கு என்றார்". அதற்கு அவன் "எத்தனை முறை அலை வந்து கரையை மோதினாலும் அது சிறிது கூட கரையாது இருந்தது." ஆகவே கரையைப்போல், எத்தனை இடர்பாடுகள் ஊடறுத்தாலும் ,மனதை வலிமையாக வைத்திருக்கக் கற்றுக்கொண்டேன்; என்றான். இப்போது , இரண்டாமவனை நோக்கி " நீ பயின்றதை விளக்கு என்றார். அதற்கு அவன் " எத்தனை முறை முயன்றும் கரையை கரைக்க முடியாவிட்டாலும் மனம் தளராது மீண்டும் மீண்டும் முயற்சிக்க கற்றுக்கொண்டேன்" என்றான்.


இப்பொழுது துறவி கூறினார்." சில நேரங்களில் கரையாய் இரு. சில நேரங்களில் அலையாய் இரு".


நீதி: சொல் மட்டுமே நமக்கு கற்றலைத் தருவது இல்லை. சில நேரங்களில் மெய்யுனர்வுதான் தரும்.

Comments

தோழி said…
நீதி: சொல் மட்டுமே நமக்கு கற்றலைத் தருவது இல்லை. சில நேரங்களில் மெய்யுனர்வுதான் தரும்.

சத்தியமான வார்த்தைகள்...

Popular posts from this blog

2024 தேவார ஆலய பயணம் - 1

வாய்மை எனும் பொய்மை.