Posts

Showing posts from June, 2013
Image
கழுகுமலை -----------------                                         நான் தற்போது வசித்து வரும் சிவகாசிக்கு அருகில் (38 கி.மீ ) இருந்தாலும் , கழுகுமலை என்ற வரலாற்று  பின்னணியுடைய ஊருக்கு இதுவரை சென்றது இல்லை.இங்கு உள்ள கழுகாசலமூர்த்தி , கல்வெட்டுக்கோயில் மற்றும் சமணர் படுக்கை ஆகியவற்றை காணவேண்டும் என்ற ஆவல் நீண்ட நாளாக மனதில் இருந்தாலும் ,ஏனோ அங்கு செல்வது மட்டும் கைகூடவில்லை. இன்று எப்படியாவது அந்த இடத்தை பார்த்து விடவேண்டும் என முடிவு செய்து , எனது நண்பன்  விக்னேஷ் உடன் புறப்பட்டேன். சிவகாசியிலிருந்து கழுகுமலை செல்வதற்கு ஒரு மணி நேரம் ஆகியது. கழுகுமலை - சிவகாசி ,கோவில்பட்டி , சங்கரன் கோவில் ஆகிய ஊர்களுடன் தரை வழி இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. ஊருக்குள் நுழைந்தவுடன் நாம் காணவேண்டிய கல்வெட்டுக்கோயில் வந்துவிடுகிறது.                ...