வெள்ளிமலை
நான் , கண்ணன் மற்றும் ரவி தோட்டத்திலிருந்து தெரிவது வருசநாடு பொதுவாகவே மலையும் மலை சார்ந்த இடங்களுக்கு செல்லுவதும் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். அதிலும் மலையேற்றம் மேற்கொண்டாலோ (trekking) கேட்கவே வேண்டாம். ஆனால் இந்த முறை நான் நடந்து செல்லாமல் வண்டியில் செல்ல முடிவு எடுத்தேன். காரணம் பயண தொலைவும் , போதிய காலமின்மையும் ஆகும். ஒரு நாள் மாலை வேளையில் நண்பன் கண்ணன் திடீரென அழைத்து , வெள்ளிமலை என்ற இடத்திற்கு செல்வோமா எனக்கேட்டான். சரி என்று கிளம்பிவிட்டேன். இந்த இடத்தில் வெள்ளிமலை பற்றி சிறு குறிப்பு- தேனியிலிருந்து வருஷநாடு செல்லும் வழியில் கடமலைக்குண்டு என்ற ஊர் வருகிறது. அங்கிருந்து மேற்காக திரும்பினால் முதலில் குமணன்தொழு,அடுத்து கோவன்கள், அடுத்து கோரையூத்து வருகிறது. கோரையூத்து ஊருடன் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு ஆகியவை முடிந்துவிடுகிறது. அலைபேசி தொடர்புகூட அரிதாகத்தான் கிடைக்கின்றது. கோரையூத்தை கடந்து சென்றால் 25 கி.மீ தொலைவிற்கு வேறு ஊர்களே கிடையாது. அடுத்து பொம்மராசபுரம் என்ற ஊர் வருகின்றது. அதையும் கடந்து சென்றால் மலை அடிவாரத்தில...