Posts

Showing posts from 2009

மலை ஏற்றம்.

Image
இந்தியா விடுதலை விடுமுறை இந்த முறை சனிக்கிழமை வந்ததால் இரண்டு நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைத்தது. ஆகவே எங்கு செல்லலாம் என சிந்தித்துக் கொண்டு இருந்த போது , எனது நண்பர் ஒருவர் அவருடைய மலைத்தோட்டம் இராசபாளயத்திற்கு அருகில், மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளதாகவும் , இரண்டு நாட்களுக்கு அங்கு செல்லலாம் என்று கூறினார். மறுப்பின்றி ஏற்றுக் கொண்டேன்.என்னுடன் மேலும் ஐந்து நண்பர்களும் சேர்ந்துகொள்ள சனிக்கிழமை காலையில் எங்களது பயணத்தை ஆரம்பித்தோம். எங்களது பொதிகளை சுமந்து வர மூன்று கழுதைகளும் உடன் வந்தன ஆரம்பமே சற்று அச்சத்துடன் தொடங்கியது. மலையின் அடிவாரத்தில் யானையின் நடமாட்டம் மிகுதியாக இருப்பதால் சற்று நேரம் கழித்து கிளம்பலாம் என்று வழிகாட்டியும் பல பயண அனுபவமுள்ள நண்பர் காளி கூறினார். நிற்க . இங்கு ஒரு செய்தியை நான் குறிபிட்டாகவேண்டும் . மலைத் தோட்டங்களில் வேலை செய்வோர் மலை ஏறும்போது யானையால் நாம் துரத்தப் படாமல் இருக்க கழுதையை உடன் அழைத்துச் செல்லவேண்டும் என கூறுகின்றனர். கழுதையிலிருந்து வெளிப்படும் ஒரு நாற்றம் யானையை நமது அருகில் வர விடாது செய்து விடும் என்று கூறுகின்றனர். ...

கன்னியாகுமரி சுற்றுலா

Image
கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் நான் நமது நண்பர்களுடன் சுற்றுலா செல்லலாம் என முடிவு செய்து , சனவரி 25 மற்றும் 26 ஆகிய இரண்டு நாட்களுக்கு கன்னியாகுமரி சென்றோம். முதல் நாள் காலையில் பத்மநாதபுரம் அரண்மனையை பார்க்கச்சென்றோம். அதைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருந்த , படித்து இருந்த எனக்கு , அதை கண்டவுடன் ஏமாற்றம் தான் மிஞ்சியது. ஏதோ தஞ்சைப் பெரிய கோவில் அளவிற்கு இருக்கும் என்று கற்பனை செய்த எனக்கு , நமது அந்த காலத்து மச்சு வீடு அளவிற்குத்தான் இருந்தது. இருந்தாலும் நல்லதொரு அனுபவமாக இருந்தது. அங்கிருந்து திற்பரப்பு நீர்வீழ்ச்சிக்கு சென்றோம் .அங்கு சென்ற பின்னர் தான் தெரிய வந்தது , அது ஒரு சாக்கடை என்று. பின்பு அருகில் உள்ள தொட்டில் பாலம் என்ற இடத்திற்கு சென்றோம் . நிறைய திரைப்படங்களில் பார்த்து இருந்தாலும் நேரில் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. மறுநாள் காலையில் அய்யன் திருவள்ளுவன் மற்றும் விவேகானந்தர் பாறை ஆகியவற்றை கண்டோம். அய்யன் வள்ளுவனின் 1333 அடி உயர சிலையைக் கண்டோம். மிரட்சியாக இருந்தது. மாலையில் வட்டப்பாறை என்கின்ற நீர்வீழ்ச்சிக்கு சென்றோம். அருமையான , திளைப்பில் ஆழ்த்துகிற ஒர...
Image
இந்த இடத்தின் பெயர் சதுரகிரி மகாலிங்க மலை . இது மதுரையிலிருந்து 75 கி. மீ தூரத்தில் உள்ளது. இது ஒரு சிவன் ஆலயம் . மலை அடிவாரத்தில் இருந்து மூன்று மணி நேரம் மலையில் பயணம் செய்து பின்பு ஆலயத்தை அடைய வேண்டும் . சித்தர்கள் வாழ்ந்ததாக கூறப்படும் இந்த இடம் மிகவும் இறை உணர்வு உடையதாக இருக்கின்றது.