Posts

Showing posts from June, 2010

தத்துவம்

Image
அந்த துறவியாருக்கு இரு மாணவர்கள் இருந்தனர் . தினமும் அவர் அவர்களுக்கு பாடம் பயிற்றுவித்தார். இன்று அவர்களை கடற்கரைக்கு அழைத்து வந்தார். சிறிது நேரம் , மூவரும் நின்றிருந்தனர். பிறகு துறவி முதல் மாணவனை நோக்கி " இன்று நீ பயின்றதை விளக்கு என்றார்". அதற்கு அவன் "எத்தனை முறை அலை வந்து கரையை மோதினாலும் அது சிறிது கூட கரையாது இருந்தது." ஆகவே கரையைப்போல், எத்தனை இடர்பாடுகள் ஊடறுத்தாலும் ,மனதை வலிமையாக வைத்திருக்கக் கற்றுக்கொண்டேன்; என்றான். இப்போது , இரண்டாமவனை நோக்கி " நீ பயின்றதை விளக்கு என்றார். அதற்கு அவன் " எத்தனை முறை முயன்றும் கரையை கரைக்க முடியாவிட்டாலும் மனம் தளராது மீண்டும் மீண்டும் முயற்சிக்க கற்றுக்கொண்டேன்" என்றான். இப்பொழுது துறவி கூறினார்." சில நேரங்களில் கரையாய் இரு . சில நேரங்களில் அலையாய் இரு ". நீதி: சொல் மட்டுமே நமக்கு கற்றலைத் தருவது இல்லை. சில நேரங்களில் மெய்யுனர்வுதான் தரும்.

தத்துவம்

Image
அண்மையில் இரு வேறு ஏடுகளில் படித்த - கடவுளின் இருத்தலைப் பற்றிய இரு வேறு விதமான ; சிந்தனையைத் தூண்டக் கூடிய சிறு கதைகள் இவை. படித்து முடித்ததும் சிலருக்கு கடவுள் உண்டா அல்லது இல்லையா என்ற குழப்பம் மேலும் வலுப்பெறும் , சிலருக்கு கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை என்ற தெளிவு பிறக்கும். நீண்ட காலமாக கடவுள் தேவை இல்லை என்று கூறிக்கொண்டு இருக்கும் ஒரு தத்துவ அறிஞரின் முன்னாள் , ஒரு நாள் திடீரென்று கடவுள் தோன்றுகிறார். தத்துவ அறிஞர் கடவுளைப் பார்த்து நீங்கள் யார் என கேட்க "நான்தானப்பா கடவுள் " என்று கடவுள் பதில் உரைக்கின்றார். அதற்கு தத்துவ அறிஞர் "கடவுள் என்றால்?" எனக் கேட்க ; கடவுள் "நான்தான் இந்த உலகை படைத்தேன் , நான் தான் இந்த உலகில் நல்ல செயல்கள் மற்றும் தீய செயல்கள் ஆகியவற்றை முடிவு செய்கின்றேன் " என்று கூறுகின்றார். தத்துவ அறிஞரோ கடவுளைப் பார்த்து " நீங்கள் சொல்வதால் மட்டுமே ஒரு செயல் நல்ல செயல் அல்லது தீய செயல் என்று ஆகின்றதா ; அல்லது ஒரு செயல் நல்லதாகவோ , தீயதாகவோ இருப்பதால் நீங்கள் அதை...