கன்னியாகுமரி சுற்றுலா
கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் நான் நமது நண்பர்களுடன் சுற்றுலா செல்லலாம் என முடிவு செய்து , சனவரி 25 மற்றும் 26 ஆகிய இரண்டு நாட்களுக்கு கன்னியாகுமரி சென்றோம். முதல் நாள் காலையில் பத்மநாதபுரம் அரண்மனையை பார்க்கச்சென்றோம். அதைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருந்த , படித்து இருந்த எனக்கு , அதை கண்டவுடன் ஏமாற்றம் தான் மிஞ்சியது. ஏதோ தஞ்சைப் பெரிய கோவில் அளவிற்கு இருக்கும் என்று கற்பனை செய்த எனக்கு , நமது அந்த காலத்து மச்சு வீடு அளவிற்குத்தான் இருந்தது. இருந்தாலும் நல்லதொரு அனுபவமாக இருந்தது. அங்கிருந்து திற்பரப்பு நீர்வீழ்ச்சிக்கு சென்றோம் .அங்கு சென்ற பின்னர் தான் தெரிய வந்தது , அது ஒரு சாக்கடை என்று. பின்பு அருகில் உள்ள தொட்டில் பாலம் என்ற இடத்திற்கு சென்றோம் . நிறைய திரைப்படங்களில் பார்த்து இருந்தாலும் நேரில் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. மறுநாள் காலையில் அய்யன் திருவள்ளுவன் மற்றும் விவேகானந்தர் பாறை ஆகியவற்றை கண்டோம். அய்யன் வள்ளுவனின் 1333 அடி உயர சிலையைக் கண்டோம். மிரட்சியாக இருந்தது. மாலையில் வட்டப்பாறை என்கின்ற நீர்வீழ்ச்சிக்கு சென்றோம். அருமையான , திளைப்பில் ஆழ்த்துகிற ஒர...