Posts

2024 தேவார ஆலய பயணம் - 1

Image
                                           பாடல் பெற்ற ஆலய பயணம்     ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாத இறுதி வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் தேவாரப் பாடல் பெற்ற சிவ ஆலயங்களுக்கு குடும்பத்துடன் சென்று  வழிபடுவது வழக்கம்.  அதுபோல இந்த ஆண்டும் குடும்பத்தோடு சிதம்பரம் மற்றும் வைத்தீசுவரன் கோவில் ஆகிய சிவாலயங்களை சுற்றி உள்ள பாடல் பெற்ற ஆலயங்களுக்கு சென்று வந்தோம். ஆலய வழிபாடு என்பது  மனதிற்கு அமைதியும், மகிழ்ச்சியும் தரக்கூடியது. அவ்வகையில் இந்த ஆண்டும் எங்களது பயணம் மிகவும் இனிமையாக அதே நேரத்தில் மனதிற்கு புத்துணர்வு அளிப்பதாகவும் இருந்தது.  வைத்தீசுவரன் கோவில் மற்றும் சிதம்பரம் ஆகிய ஊர்களை சுற்றி உள்ள ஆலயங்களை தேர்வு செய்ததால், அந்த ஆலயங்களுக்கு செல்ல ஏதுவாக ஏதாவது ஒரு மையப்பகுதியை தேர்ந்தெடுக்க வேண்டிய தேவை இருந்தது. அது வைத்தீசுவரன் கோவிலாக அமை...
Image
கழுகுமலை -----------------                                         நான் தற்போது வசித்து வரும் சிவகாசிக்கு அருகில் (38 கி.மீ ) இருந்தாலும் , கழுகுமலை என்ற வரலாற்று  பின்னணியுடைய ஊருக்கு இதுவரை சென்றது இல்லை.இங்கு உள்ள கழுகாசலமூர்த்தி , கல்வெட்டுக்கோயில் மற்றும் சமணர் படுக்கை ஆகியவற்றை காணவேண்டும் என்ற ஆவல் நீண்ட நாளாக மனதில் இருந்தாலும் ,ஏனோ அங்கு செல்வது மட்டும் கைகூடவில்லை. இன்று எப்படியாவது அந்த இடத்தை பார்த்து விடவேண்டும் என முடிவு செய்து , எனது நண்பன்  விக்னேஷ் உடன் புறப்பட்டேன். சிவகாசியிலிருந்து கழுகுமலை செல்வதற்கு ஒரு மணி நேரம் ஆகியது. கழுகுமலை - சிவகாசி ,கோவில்பட்டி , சங்கரன் கோவில் ஆகிய ஊர்களுடன் தரை வழி இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. ஊருக்குள் நுழைந்தவுடன் நாம் காணவேண்டிய கல்வெட்டுக்கோயில் வந்துவிடுகிறது.                ...