வாய்மை எனும் பொய்மை.
இந்தியா , எப்போதும் வாய்மையின்(சத்தியம்) வழி நிற்கும் , வாய்மையே அதன் உயிர் நாடி என்றே நாம் (நான்) அறிவுறுத்தப்பட்டு வந்திருக்கின்றோம். வாய்மையே வெல்லும் - இது தமிழக அரசின் குறியீட்டுச் சொல்லாக இருக்கின்றது. ஆனால் என்றைக்காவது இந்த நாடு வாய்மையை கடைப்பிடித்து இருக்கின்றதா என்று ஆராய்ந்தால் , இதன் வரலாற்றின் ஒரு பக்கத்தில் கூட அத்தகைய ஒரு செயலை நாம் காண முடியாது. இதிகாசங்களும், புராணங்களும் அநீதியையே இலக்கை அடைய உதவும் கருவியாக வலியுறுத்தி வந்திருக்கின்றன. அதை படித்து வளர்ந்ததாலோ என்னவோ இன்றைக்கு இந்திய நாடு எந்த ஒரு தளத்திலும் - அது அரசியலாகட்டும், சமயமாகட்டும் அல்லது பொருளாதாரமாகட்டும் - அநீதி ஒன்றையே அதன் துணையாக கொள்கிறது. இன்று நடந்த ஒரு நிகழ்ச்சி இதற்கு வலுசேர்கின்றது. தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களுடைய தாயார் சென்னையில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக இந்தியாவின் அனுமதியை வேண்டியிருந்தார். இந்திய அரசும் முதலில் அதற்கு அனுமதி வழங்கி இருந்தது. ஆனால் அவர் இந்தியா(சென்னை)வந்து இறங்கிய உடனே சென்னையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு , அவரை வானூர்தி நிலையத்தில் இருந்தவ...