Posts

Showing posts from 2010

கொடைக்கானல் மலையேற்றம்

Image
வெள்ளகேவி தாண்டி (கண்ணன் மற்றும் முத்துக்குமார்) ........... முடியல........ ஸ்ஸ்ஸ்ஸ்...........     அப்பப்பா ...இப்பவே கண்ணா கட்டுதே ......(முத்துக்குமார்) ஏ ...... நல்லா பார்த்துக்க  நானும் trekking போறேன்.....(கண்ணன் அண்ணா) காயமே இது பொய்யடா ....வெறும் காற்றடைத்த பையடா .....(விஜி, அருண்  மற்றும் சுப்பண்ணா) வெள்ளகேவி வெள்ளகேவியில் இளைப்பாறல் காலை உணவுடன்  ஒரு அழகான நீரோடை கவின்மிகு காட்சி                                                                                                                                                         ...

வெள்ளிமலை

Image
நான் , கண்ணன்  மற்றும் ரவி  தோட்டத்திலிருந்து தெரிவது வருசநாடு பொதுவாகவே மலையும் மலை சார்ந்த இடங்களுக்கு செல்லுவதும் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். அதிலும் மலையேற்றம் மேற்கொண்டாலோ (trekking) கேட்கவே வேண்டாம். ஆனால் இந்த முறை நான் நடந்து செல்லாமல் வண்டியில் செல்ல முடிவு எடுத்தேன். காரணம் பயண தொலைவும் , போதிய காலமின்மையும் ஆகும். ஒரு நாள் மாலை வேளையில் நண்பன் கண்ணன் திடீரென அழைத்து , வெள்ளிமலை என்ற இடத்திற்கு செல்வோமா எனக்கேட்டான். சரி என்று கிளம்பிவிட்டேன். இந்த இடத்தில் வெள்ளிமலை பற்றி சிறு குறிப்பு- தேனியிலிருந்து வருஷநாடு செல்லும் வழியில் கடமலைக்குண்டு என்ற ஊர் வருகிறது. அங்கிருந்து மேற்காக திரும்பினால் முதலில் குமணன்தொழு,அடுத்து கோவன்கள், அடுத்து கோரையூத்து வருகிறது. கோரையூத்து  ஊருடன் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு ஆகியவை முடிந்துவிடுகிறது. அலைபேசி தொடர்புகூட அரிதாகத்தான் கிடைக்கின்றது. கோரையூத்தை கடந்து சென்றால் 25 கி.மீ தொலைவிற்கு வேறு ஊர்களே கிடையாது. அடுத்து பொம்மராசபுரம் என்ற ஊர் வருகின்றது. அதையும் கடந்து சென்றால் மலை அடிவாரத்தில...

தத்துவம்

Image
அந்த துறவியாருக்கு இரு மாணவர்கள் இருந்தனர் . தினமும் அவர் அவர்களுக்கு பாடம் பயிற்றுவித்தார். இன்று அவர்களை கடற்கரைக்கு அழைத்து வந்தார். சிறிது நேரம் , மூவரும் நின்றிருந்தனர். பிறகு துறவி முதல் மாணவனை நோக்கி " இன்று நீ பயின்றதை விளக்கு என்றார்". அதற்கு அவன் "எத்தனை முறை அலை வந்து கரையை மோதினாலும் அது சிறிது கூட கரையாது இருந்தது." ஆகவே கரையைப்போல், எத்தனை இடர்பாடுகள் ஊடறுத்தாலும் ,மனதை வலிமையாக வைத்திருக்கக் கற்றுக்கொண்டேன்; என்றான். இப்போது , இரண்டாமவனை நோக்கி " நீ பயின்றதை விளக்கு என்றார். அதற்கு அவன் " எத்தனை முறை முயன்றும் கரையை கரைக்க முடியாவிட்டாலும் மனம் தளராது மீண்டும் மீண்டும் முயற்சிக்க கற்றுக்கொண்டேன்" என்றான். இப்பொழுது துறவி கூறினார்." சில நேரங்களில் கரையாய் இரு . சில நேரங்களில் அலையாய் இரு ". நீதி: சொல் மட்டுமே நமக்கு கற்றலைத் தருவது இல்லை. சில நேரங்களில் மெய்யுனர்வுதான் தரும்.

தத்துவம்

Image
அண்மையில் இரு வேறு ஏடுகளில் படித்த - கடவுளின் இருத்தலைப் பற்றிய இரு வேறு விதமான ; சிந்தனையைத் தூண்டக் கூடிய சிறு கதைகள் இவை. படித்து முடித்ததும் சிலருக்கு கடவுள் உண்டா அல்லது இல்லையா என்ற குழப்பம் மேலும் வலுப்பெறும் , சிலருக்கு கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை என்ற தெளிவு பிறக்கும். நீண்ட காலமாக கடவுள் தேவை இல்லை என்று கூறிக்கொண்டு இருக்கும் ஒரு தத்துவ அறிஞரின் முன்னாள் , ஒரு நாள் திடீரென்று கடவுள் தோன்றுகிறார். தத்துவ அறிஞர் கடவுளைப் பார்த்து நீங்கள் யார் என கேட்க "நான்தானப்பா கடவுள் " என்று கடவுள் பதில் உரைக்கின்றார். அதற்கு தத்துவ அறிஞர் "கடவுள் என்றால்?" எனக் கேட்க ; கடவுள் "நான்தான் இந்த உலகை படைத்தேன் , நான் தான் இந்த உலகில் நல்ல செயல்கள் மற்றும் தீய செயல்கள் ஆகியவற்றை முடிவு செய்கின்றேன் " என்று கூறுகின்றார். தத்துவ அறிஞரோ கடவுளைப் பார்த்து " நீங்கள் சொல்வதால் மட்டுமே ஒரு செயல் நல்ல செயல் அல்லது தீய செயல் என்று ஆகின்றதா ; அல்லது ஒரு செயல் நல்லதாகவோ , தீயதாகவோ இருப்பதால் நீங்கள் அதை...

வாய்மை எனும் பொய்மை.

Image
இந்தியா , எப்போதும் வாய்மையின்(சத்தியம்) வழி நிற்கும் , வாய்மையே அதன் உயிர் நாடி என்றே நாம் (நான்) அறிவுறுத்தப்பட்டு வந்திருக்கின்றோம். வாய்மையே வெல்லும் - இது தமிழக அரசின் குறியீட்டுச் சொல்லாக இருக்கின்றது. ஆனால் என்றைக்காவது இந்த நாடு வாய்மையை கடைப்பிடித்து இருக்கின்றதா என்று ஆராய்ந்தால் , இதன் வரலாற்றின் ஒரு பக்கத்தில் கூட அத்தகைய ஒரு செயலை நாம் காண முடியாது. இதிகாசங்களும், புராணங்களும் அநீதியையே இலக்கை அடைய உதவும் கருவியாக வலியுறுத்தி வந்திருக்கின்றன. அதை படித்து வளர்ந்ததாலோ என்னவோ இன்றைக்கு இந்திய நாடு எந்த ஒரு தளத்திலும் - அது அரசியலாகட்டும், சமயமாகட்டும் அல்லது பொருளாதாரமாகட்டும் - அநீதி ஒன்றையே அதன் துணையாக கொள்கிறது. இன்று நடந்த ஒரு நிகழ்ச்சி இதற்கு வலுசேர்கின்றது. தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களுடைய தாயார் சென்னையில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக இந்தியாவின் அனுமதியை வேண்டியிருந்தார். இந்திய அரசும் முதலில் அதற்கு அனுமதி வழங்கி இருந்தது. ஆனால் அவர் இந்தியா(சென்னை)வந்து இறங்கிய உடனே சென்னையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு , அவரை வானூர்தி நிலையத்தில் இருந்தவ...