தத்துவம்


அண்மையில் இரு வேறு ஏடுகளில் படித்த - கடவுளின் இருத்தலைப் பற்றிய இரு வேறு விதமான ; சிந்தனையைத் தூண்டக் கூடிய சிறு கதைகள் இவை. படித்து முடித்ததும் சிலருக்கு கடவுள் உண்டா அல்லது இல்லையா என்ற குழப்பம் மேலும் வலுப்பெறும் , சிலருக்கு கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை என்ற தெளிவு பிறக்கும்.

நீண்ட காலமாக கடவுள் தேவை இல்லை என்று கூறிக்கொண்டு இருக்கும் ஒரு தத்துவ அறிஞரின் முன்னாள் , ஒரு நாள் திடீரென்று கடவுள் தோன்றுகிறார். தத்துவ அறிஞர் கடவுளைப் பார்த்து நீங்கள் யார் என கேட்க "நான்தானப்பா கடவுள் " என்று கடவுள் பதில் உரைக்கின்றார். அதற்கு தத்துவ அறிஞர் "கடவுள் என்றால்?" எனக் கேட்க ; கடவுள் "நான்தான் இந்த உலகை படைத்தேன் , நான் தான் இந்த உலகில் நல்ல செயல்கள் மற்றும் தீய செயல்கள் ஆகியவற்றை முடிவு செய்கின்றேன் " என்று கூறுகின்றார். தத்துவ அறிஞரோ கடவுளைப் பார்த்து " நீங்கள் சொல்வதால் மட்டுமே ஒரு செயல் நல்ல செயல் அல்லது தீய செயல் என்று ஆகின்றதா ; அல்லது ஒரு செயல் நல்லதாகவோ , தீயதாகவோ இருப்பதால் நீங்கள் அதை வழி மொழிகின்றீர்கள ?" எனக் கேட்கின்றார். கடவுளோ " நான் சொல்வதால் தான் ஒரு செயல் நல்லதாகவோ அல்லது தீயதாகவோ நிலை நிறுத்தப்படுகின்றது" என்று பதில் கூறுகின்றார். " அப்படியானால் பிறந்த ஒரு குழந்தையை சுவற்றில் அடித்துக் கொல்லுவது ஒன்றும் தீய செயல் அல்ல என்று நீங்கள் கூறினால் அந்த செயல் தீமை ஆகாதா " என்று கடவுளைப் பார்த்து கேட்கின்றார். கடவுள் திகைத்து நிற்கின்றார். அறிஞர் தொடர்ந்து " ............. இல்லை அல்லவா , உறுதியாக நீங்கள் அந்த செயல் நல்ல செயல் என்று கூற மாட்டீர்கள், ஆக எங்களுக்கு தெரிந்த ஒன்றை கூறுவதற்கு நீங்கள் எங்களுக்கு தேவையில்லை " என்று கூறவே "எப்படியும் போய்த் தொலையுங்கள் என்று கூறிவிட்டு கடவுள் (என்று சொல்லிக்கொள்பவர் ) மறைகின்றார்.
.......... கிரேக்கத் தத்துவ மேதை அரிஸ்டாட்டில் கூறிய உவமைக் கதை ( கதை --- இதற்கு மிகச் சரியான தமிழ் வார்த்தை இருந்தால் எனக்கு தெரிவிக்கவும் )

கதை - 2
---------
" அறிவியலில் நாங்கள் நிறைய இலக்குகளை கடந்து விட்டோம் , இனிமேல் எங்களால் செயற்கையாக இந்த உலகினில் உயிர்களை ஆக்கவோ அழிக்கவோ இயலும்" என்று இறுமாப்புடன் பேசிக்கொண்டு இருந்த ஒரு அறிவியல் அறிஞர் முன்னால் கடவுள் வந்து நின்றார். அவரை அறியாத அறிவியல் அறிஞரோ " உனக்கு என்ன வேண்டுமோ கேள் , நொடியில் என்னால் உண்டாக்கித் தர இயலும்" எனக் கூறுகின்றார். அதற்கு கடவுள் " களிமண்ணால் ஆனா ஒரு பாவையைச் செய்து அதற்கு உயிர் ஊட்ட வேண்டும் " என்று கேட்கின்றார். உடனே அறிவியல் அறிஞர் விரைந்து கீழே குனிந்து மண்ணை எடுக்க முயல ;
கடவுள் கூறுகின்றார் " அப்பா இந்த மண் நான் படைத்தது ".

மேலே உள்ள இரண்டு கதைகளும் கூற வருகின்ற கருத்து நமக்கு விளங்கிக்கொள்ள இயலுமானால் (!!!!!!!????????) கடவுளின் இருத்தலைப் பற்றிய ஒரு தெளிவான சிந்தனை நமக்கு கிடைக்கும் என்பது உறுதி.

அன்புடன்

குமார்.

Comments

Nithi said…
"நான் தான் இந்த உலகில் நல்ல செயல்கள் மற்றும் தீய செயல்கள் ஆகியவற்றை முடிவு செய்கின்றேன்"

- I dont understand this. Do you think God decides what we do[good or bad]?
saravana said…
thats how religion preaches

Popular posts from this blog

2024 தேவார ஆலய பயணம் - 1

வாய்மை எனும் பொய்மை.