கொடைக்கானல் மலையேற்றம்



வெள்ளகேவி தாண்டி (கண்ணன் மற்றும் முத்துக்குமார்) ........... முடியல........
ஸ்ஸ்ஸ்ஸ்...........     அப்பப்பா ...இப்பவே கண்ணா கட்டுதே ......(முத்துக்குமார்)
ஏ ...... நல்லா பார்த்துக்க  நானும் trekking போறேன்.....(கண்ணன் அண்ணா)
காயமே இது பொய்யடா ....வெறும் காற்றடைத்த பையடா .....(விஜி, அருண்  மற்றும் சுப்பண்ணா)

வெள்ளகேவி
வெள்ளகேவியில் இளைப்பாறல்
காலை உணவுடன் 
ஒரு அழகான நீரோடை
கவின்மிகு காட்சி










                                                                                                                                                                                                                            
ஏற்கனவே ஒரு முறை சென்று இருந்தாலும் , அண்மையில் எனக்கு அறிமுகமான நண்பர் அருண் அண்ணா அவர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் கொடைக்கானல் மலையேற்றம் செல்ல முடிவு செய்தோம். அருண் அண்ணாவுடன் அவரது நண்பர்கள் முத்துக்குமார், விஜயகுமார், கண்ணன், சுப்ரமணியன், ஆகியோருடன் நான் இணைந்து செல்ல முடிவு செய்தேன். பல மலையேற்ற பயணங்களை ஏற்படுத்தித் தந்தவரும் அனுபவம் மிக்கவருமான பகதூர் அவர்கள் இந்த பயணத்தை ஏற்பாடு செய்திருந்தார். மொத்தம் 41 பேர் மலையேற்றத்திற்கு விருப்பம் தெரிவித்து இருந்தனர். . என்னுடைய புதிய நண்பர்கள் அனைவரும் மிகுந்த ஆவலில் இருந்தனர். அதிகாலை 4 மணியளவில் சிவகாசியிலிருந்து விஜயகுமார் அவருடைய வண்டியில் புறப்பட்டோம். ஏறத்தாழ ஆறு மணியளவில் கும்பக்கரையை அடைந்தோம் . எங்களது மலையேற்ற ஆரம்ப இடம் கும்பக்கரை அருவி தான். மிகுந்த மகிழ்ச்சியுடனும்
ஆரவாரத்துடனும் மலையேற்றம் ஆரம்பமாகியது. என்னுடன் வந்த நண்பர்கள் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கொண்டு வந்தனர். முதல் ஒரு மணி நேரத்திற்கு மிகுந்த ஏற்றம் எதுவும் கிடையாது என்பதால் என் நண்பர்கள் விரைவாகவும் ஆர்வமுடனும் நடந்தனர். அடுத்து ஆரம்பித்தது ஏற்றம், முதலில் பின்வாங்கியது விஜி அண்ணாதான் , ஆகவே அவருடைய பையை நான் வாங்கிக்கொண்டேன். இது அவர் சற்று இலகுவாக நடக்க உதவியது. இது மலைக்காலமாதலால் வழியெங்கிலும் சிறு சிறு நீரோடைகள் ஓடிக்கொண்டு இருந்தன. மொத்தத்தில் இரண்டுமணி நேரம் நடந்த பின்பு கருப்பசாமி கோவில் என்ற இடத்தை அடைந்தோம். அங்கு எங்களது காலை உணவை முடித்துவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்தோம். சென்னையிலிருந்து வந்திருந்த கணிபொறியாளர்கள் இந்த இடத்திற்கு வருவதற்கே தாமதமாகியது . அவர்கள் உணவை முடித்து விட்டுக்கிளம்ப தாமதமாகும் என்பதால் நானும் என் நண்பர்களும் முதலில் நடக்க ஆரம்பித்தோம். மீண்டும் விஜி அண்ணா மிகவும் மெதுவாக நடக்க ஆரம்பித்தார். இருந்தாலும் அருண் அண்ணாவும் சுப்பு அண்ணாவும் அவரை அரவணைத்து அழைத்து வந்தனர். நானும் கண்ணன் அண்ணாவும் சற்றே இடைவெளி விட்டு முன்னேறி நடந்தோம். கண்ணா அண்ணா அவர் கொண்டு வந்திருந்த நிகான் D5000 நிழற்படக் கருவியால் இயற்கை காட்சிகளை பதிவு செய்து கொண்டு இருந்தார். கும்பக்கரை அருவியிலிருந்து கொடைக்கானல் வரை செல்ல மொத்தம் 14 கி.மீ . அதில் 8 கி.மீ தொலைவில் வெள்ளகெவி என்ற சிற்றூர் உள்ளது. எட்டு மணிக்கு நடக்க ஆரம்பித்த நாங்கள் அந்த ஊரை அடையும்போது மணி 11.30 ஆகியது. இங்கு உள்ள சிறு ஆலய வாயிலில் அமர்ந்து சற்று இளைப்பாறினோம். 150 குடும்பங்கள் வாழும் அந்த ஊரில் இந்து தவிர பிற மதத்தவர் இல்லை. பிற மதத்தவர் பரப்புரை செய்யவும் அனுமதி இல்லை. ஊர் ஓர் ஒழுங்குடன் அமைந்துள்ளது. இவ்வுலகில் மனிதம் இன்னும் மடிந்து விடவில்லை என்பதை உணர்த்தும்விதமாக இந்த ஊரை சேர்ந்த ஒருவர் அவராக விருப்பப்பட்டு எங்களுக்கு கருப்பட்டி காபி தயார் செய்து கொடுத்தார். நாங்கள் அதற்கு பணம் கொடுக்க முனைந்த போது உறுதியோடு வாங்க மறுத்துவிட்டார். நாங்கள் கொண்டு சென்ற ரொட்டி மற்றும் நொறுக்கு தீனிகளை அவருக்கு மனமுவந்து அளித்தோம். கட்டாயத்தின் பேரில் அன்போடு பெற்றுக்கொண்டு எங்களுக்கு விடையளித்தார். எங்களுடன் வந்த ஒருவருக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு நடக்கமுடியாமல் துன்பப்பட்டதால் இந்த ஊரில் உள்ள ஒரு குதிரை ஒன்றை அவரை அழைத்து வர ஏற்பாடு செய்துவிட்டு மேற்கொண்டு நாங்கள் நடக்க ஆரம்பித்தோம். என்னுடன் வந்த ஐந்து பேரில் கண்ணன் அண்ணா மட்டும் என்னோடு நன்றாக நடந்தார். மீதி மூவரும் மெதுவாக நடந்து வந்தனர். நாங்கள் நடந்த அன்று காலநிலை மிகவும் குளிர்ச்சியாக இருந்தததால் அனைவரும் தப்பித்தனர், இல்லாவிட்டால் வெளியும் சேர்ந்து அவர்களை ஒரு வழி செய்திருக்கும். எனக்கு சற்று அலுப்பாக (boring) இருந்ததால் நான் கண்ணன் அண்ணாவையும் விட்டுவிட்டு முன்னேறி நடந்து 2.45 மணியளவில் டால்பின்நோஸ் என்ற இடத்தை அடைந்தேன். அனைவரும் 3.30 மணியளவில் அங்கு வந்து சேர்ந்தனர். அங்கு சிறிது ஓய்வெடுத்து விட்டு வட்டக்காணல் என்ற இடத்தில் உள்ள எங்கள் வண்டியை அடைந்தோம். என்னுடன் வந்த ஐந்து பேரில் கண்ணா அண்ணாவைத்தவிர மற்ற அனைவரும் இனிமேல் மலையேற்றத்தைப்பற்றி நினைக்கவேமாட்டோம் என்று கூறி சிரித்தனர். ஒருவழியாக நல்லபடியாக மலையேற்றம் முடிந்தது. நான்கு மணியளவில் மதிய உணவை முடித்துவிட்டு நண்பர் ஒருவருடைய வீட்டில் சென்று குளித்துவிட்டு மாலை 6.30 மணியளவில் ஊருக்கு கிளம்பினோம். திரும்பும் வழியில் அனைவரும் கலந்துரையாடும்போது வலியெல்லாம் மறந்து இந்த பயணத்தை மிகவும் விரும்பியதாகவும் மீண்டும் இதுபோல் செல்ல வேண்டும் என்று மனம் விரும்பிக்கூறினர்.

Comments

Nithi said…
Saravana,
Please post more photos da.
- Nithi.
senthil4php said…
Very nice explanation about your trip....

Popular posts from this blog

2024 தேவார ஆலய பயணம் - 1

வாய்மை எனும் பொய்மை.